காய்ச்சல் தடுப்பு முகாம்

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.

Update: 2023-01-07 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பழனியப்பபுரத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம் நடந்தது. இதையொட்டி நடந்த தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவ அலுவலர் வள்ளி பார்வையிட்டார். அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்கள் பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் சித்த மருந்தாளுநர் உச்சிமாகாளி வழங்கினார். இதில் கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் நல்லத்தம்பி, சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஊராட்சி செயலர் முருகேசன் உள்ளிட்ட மஸ்தூர், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்