சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைவு

தேசிய அளவில் உணவு பொருள்களின் விலை குறியீடு குறைந்துள்ள நிலையில் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக பொருளியல்நிபுணர் தெரிவித்தார்.

Update: 2023-05-13 18:45 GMT

தேசிய அளவில் உணவு பொருள்களின் விலை குறியீடு குறைந்துள்ள நிலையில் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக பொருளியல்நிபுணர் தெரிவித்தார்.

பணவீக்கம்

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் கூட்டி உள்ள நிலையில் பண வீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும் 6 சதவீதம் வரை பணவீக்கம் இருப்பது சகித்துக் கொள்ளக்கூடிய அளவுதான் என தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தால் ஏற்படும் விளைவுகளை கண்காணித்து அதன் பின்னர் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

தற்போது அது பற்றி முடிவு கள் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவு பொருட்களின் விலை கடந்த மார்ச் மாதம் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 3.8சதவீதமாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில்லறை விற்பனை பணவீக்கம் நகர்ப்புறத்தில் 4.9 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 4.7 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

தொழில் உற்பத்தி

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்வறை பணவீக்கம் தற்போது குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியும் வங்கி வட்டி விகித மாற்றத்தை குறித்து தற்போது சிந்திக்க தயாராக இல்லை. ஆனால் தொழில் உற்பத்தி கடந்த மார்ச் மாதம் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய கட்டத்தில் 5.8 சதவீதமாக தொழில் உற்பத்தி இருந்தது. இதேபோன்று உற்பத்தி துறைச் செயல்பாடு மற்றும் மின் உற்பத்தி ஆகியவையும் கடந்த காலங்களை விட குறைந்துள்ளதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்