தொற்று நோய் தடுப்பு அதிகாரி ஆய்வு
கடையம் பகுதிகளில் தொற்று நோய் தடுப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் சுற்று வட்டார பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு நடவடிக்கைகளை சென்னையில் இருந்து வந்திருந்த தொற்று நோய் தடுப்பு இயக்குனர் சம்பத் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளி சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனி குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், மாவட்ட பூச்சியியல் அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சியியல் அலுவலர் பாலாஜி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.