மோரனஅள்ளி அரசு பள்ளியில்மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2023-09-01 19:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி ஊராட்சி, மோரனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா மற்றும் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பார்வதி சரவணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். 118 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பாரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்