தொழில் வணிக கழக பொதுக்குழு கூட்டம்

காரைக்குடி எம்.ஏ.எம். சிதம்பரம் அரங்கில் தொழில் வணிக கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-31 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி எம்.ஏ.எம். சிதம்பரம் அரங்கில் தொழில் வணிக கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கே.என்.சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணப்பன் வரவேற்று பேசினார். துணைத்தலைவர்கள் காசிவிசுவநாதன், பெரியதம்பி, இணைச் செயலாளர்கள் கந்தசாமி, சையது, ராமநாதன் உள்பட 80 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிதாக தேர்வு செய்யப்பட்ட செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். இதில் காரைக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காரைக்குடி நகரை சுற்றியுள்ள கோட்டையூர், ஸ்ரீராம்நகர், அரியக்குடி ஆகிய பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும், தேவகோட்டை ரஸ்தா மேம்பாலத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், காரைக்குடி நகரின் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இணைச் செயலாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்