ரூ.20 லட்சத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம்

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-10-08 18:36 GMT

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி கீழ்காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அங்குள்ள இளைஞர்களுடன் இறகுப்பந்து விளையாடிய அவர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கை நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சுப்பிரமணி, அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கண்ணன், குமார், பாரதிராஜா, பிரகாஷ், கதிர்வேல் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்