ரூ.25 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது என்று ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-28 20:10 GMT

திருவிடைமருதூர்;

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது என்று ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.25 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்

ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கமலா சேகர், செயல் அலுவலர் ராம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள திருநீலக்குடி நெடுஞ்சாலையின் மேற்கு புறத்தில் நாகக்குளம் அருகில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது.

தமிழக அரசுக்கு நன்றி

கஞ்சான் மேட்டு தெரு, கஞ்சான் மேட்டு முஸ்லிம் தெரு, கஞ்சான் மேட்டு முஸ்லிம் குறுக்கு தெரு, பாத்திமா நகர் தெற்கு, மேற்கு, கிழக்கு சாலைகளில் தார் சாலை மேம்பாடு ரூ.30 லட்சத்தில் செய்வது, பொது நிதி திட்டத்தின் கீழ் புதிய கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைப்பது.3-வது வார்டு ரயில்வே கேட் ஆதிதிராவிடர் தெருவில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல் என மொத்தம் ரூ 14.5 லட்சம் மதிப்பில் செய்வது, ஆடுதுறை பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையமாக மாற்றுவதற்கு சட்டமன்றத்தில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோ.சி.இளங்கோவன், ரா.சரவணன், ம.க. பாலதண்டாயுதம், சமீம்நிஷா ஷாஜகான், ஆர்.வி.குமார், செல்வராணி சிவா, சுகந்தி சுப்பிரமணியன், கண்ணன், பரமேஸ்வரி சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்