ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வியாழக்கிழமை தோறும் நடக்கிறது.

Update: 2022-06-23 19:39 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 30-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது. மேற்படி ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும், இந்திய பருத்தி கழகத்தாரும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் பருத்தியினை தூசி மற்றும் அயல் பொருட்கள் கலப்பின்றி நன்கு உலர வைத்து தரம் பிரித்து விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம். விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கு உரிய தொகை அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களை 04331-296224 என்ற தொலைபேசி எண்ணிலும், 9655180343, 8760828467, 9842452150 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்