இந்திராகாந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திராகாந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-19 16:13 GMT

இந்திராகாந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி குஜிலியம்பாறை வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவுக்கு வட்டார தலைவர் தர்மர் தலைமை தாங்கினார். பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமுராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி குஜிலியம்பாறை கடை வீதியில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோகன்ராம், அஜித், பிரகாஷ், கோபி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை, வேடசந்தூர்

நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், நிலக்கோட்டை சங்கரன் படிப்பக வளாகத்தில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வட்டார தலைவர் சி.வி.கே.எம். கோகுல்நாத் தலைமை தாங்கினார். விழாவையொட்டி இந்திராகாந்தி உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.நடராஜன், நகரதலைவர் என். நடராஜன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் துரைசேகரன், சிவாஜி மன்ற தலைவர் வீராசாமி, நகர துணைச்செயலாளர் கணேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேடசந்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், பஸ்நிலையம் அருகே இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கமலை முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி வேடசந்தூர் பஸ்நிலையம், ஆத்துமேடு பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதில் வட்டார தலைவர்கள் சதீஷ், பாலமுருகன், வேடசந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பஷீர்அகமது, மாவட்ட நிர்வாகி பாண்டியன், வட்டார பொருளாளர் பகவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்