சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி - கேப்டன் வினோத் பாபுவிற்கு முதல்-அமைச்சர் நேரில் பாராட்டு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் பாபு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2023-04-18 16:43 GMT

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் வினோத் பாபுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான வினோத் பாபு, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து முதல்-அமைச்சரை சந்தித்து, அவரிடம் வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்