இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரசார இயக்கம்

அம்பையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

Update: 2022-12-11 18:45 GMT

அம்பை:

இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் அம்பை, சேரன்மாதேவி, பாப்பாக்குடி வட்டாரங்கள் இணைந்து சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தின் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் அம்பையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அம்பை ஒன்றிய தலைவர் ஜான் தாமஸ் அந்தோணி தலைமை தாங்கினார். சேரன்மாதேவி கல்வி மாவட்ட தலைவர் சபரிகிரி நாதன், மாவட்ட துணைச்செயலாளர் உஷா மாலதி முன்னிலை வகித்தனர். பாப்பாக்குடி வட்டார தலைவர் பாரதி காந்தி வரவேற்று பேசினார். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பிரம்மநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, நெல்லை மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், நெல்லை காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் மகாதேவன், எல்.ஐ.சி. ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய சங்க மாவட்ட பொருளாளர் நாகையன், அஞ்சல் சங்க அம்பை கிளை உதவி செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அம்பை வட்டார பொருளாளர் புஷ்பா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்