விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-08 21:20 GMT

விருத்தாசலம், 

இந்திய குடியரசு கட்சி சார்பில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இணை பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட கடலூர் மெயின்ரோடு மற்றும் சிதம்பரம் மெயின்ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை விருத்தாசலம் நகராட்சி பதிவேட்டின் படி அம்பேத்கர் சாலை என்று உள்ளது. நகராட்சி மூலம் இரண்டு சாலைகளிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் சாலை இணையும் இடத்தில் உள்ள பலகையில் அம்பேத்கர் சாலை என்று எழுதிவிட்டு, சிதம்பரம் சாலை இணையும் இடத்தில் உள்ள பலகையில் பெயர் எழுதாமல் விட்டு விட்டனர். பூதாமூர் சாலை பகுதியில் உள்ள பெயர் பலகையில், மஞ்சள் கலர் அடித்து, நகராட்சி பதிவேட்டில் இல்லாத பெயரை எழுதி வைத்து உள்ளனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழும் சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்திய குடியரசு கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் மனுஅளித்தனர். இதில் அம்பேத்கர் பவுண்டேஷன் செயலாளர் சுரேஷ்குமார், தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்துவேல் மற்றும் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜீவ்காந்தி, மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அலிபாபு, சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கலாமணி தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்