விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-13 16:58 GMT


விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பீமாராஜி அனைவரையும் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலாளர் துரை, அமைப்பு செயலாளர் எல்லப்பன், இளைஞரணி செயலாளர் தங்கபிரபாகரன், மகளிர் அணி செயலாளர் சமுத்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் குணசேகரன், மாநில பொருளாளர் சத்தியசீலன், கொள்கை பரப்பு செயலாளர் நீலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழக மற்றும் மத்திய அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விகிதாச்சார முறைப்படி ஒதுக்கப்படும் சிறப்பு கூற்றுவிதி திட்டத்தில் வழங்கும் நிதியை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,281 கோடியில் சுமார் ரூ.927 கோடியை அரசிடம் திருப்பி ஒப்படைத்துள்ள நிதியை பெற்று மீண்டும் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கே வழங்க வேண்டும், ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் பயன்படுத்தி வருவதால் அதை மீட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி, துணைத்தலைவர் தர்மலிங்கம், அமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் நீலக்கொடி, இளைஞரணி செயலாளர் நாகமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பாலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்