இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு

சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-11-18 17:52 GMT

சென்னை,

சென்னை காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து இருந்த 8 மாதம் நிறைந்த கர்ப்பிணி லதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்தனர்.

வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் கோபம் அடைந்த பொதுமக்கள், கடற்படை வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்