இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-25 18:53 GMT

பரமக்குடி, 

பரமக்குடி காந்தி சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், மாநில கைத்தறி சம்மேளன பொதுச்செயலாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குக்கீ இனப்பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். வன்முறையாளர்களை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ம.தி.மு.க. பரமக்குடி நகர் செயலாளர் பிச்சை மணி, பொதுக்குழு உறுப்பினர் பழ.சரவணன், நயினார் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜீவா, ருக்மாங்கதன் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்