இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-12 09:57 GMT

ஜெய்ப்பூர்,

இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் , ராஜஸ்தானில் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படையின் இலகுரக போர் விமானம்(எல்சிஏ]தேஜஸ் இன்று பயிற்சியின் போது திடீரென விபத்துக்குள்ளானது.

பொக்ரானில் பாரத் சக்தி என்ற பெயரில் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் போர் விமானம் விபத்துக்குளாகியுள்ளது .

இந்த விபத்தில்விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்