உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது- கவர்னர் ஆர்.என்.ரவி
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
கோவை,
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றினார்.
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மொபைல் தயாரிப்பில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது.
முதல் உலக போருக்கு பின் இந்திய தலைவர்களுக்கு இந்தியர்களை கல்வி அறிவுமிக்கவர்களாக ஆக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதன் அடிப்படையில் உருவானது தான் கல்வி நிறுவனங்கள். கல்வி அறிவு மட்டுமின்றி நாட்டுப்பற்றையும் விதைக்க கல்வி நிறுவனங்கள் தேவைப்பட்டது. இந்திய கல்வி முறையானது தனித்துவமான பண்புகள் கொண்டது. இந்த தனித்துவம் தான் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதுடன், சிறந்த பங்களிப்பையும் ஆற்றுகிறது. மத்திய அரசு நாட்டை ஒரே குடும்பமாக பார்த்து வருகிறது" என்றார்.