பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு

உடன்குடி அருகே பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-13 17:16 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே வட்டன்விளை வி.வி.பெருமாள் நினைவு பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த சுதந்திர தின ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை அம்மாள் கனி தலைமை தாங்கினார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து பள்ளித் தாளாளரும், இந்து முன்னணி மாநில துணைத்தலைவருமான வி.பி.ஜெயக்குமார் பேசினார். பள்ளியின் முன்னாள் மாணவி சேர்மக்கனி செல்வகுமார் தேசியக் கொடியேற்றினார்.

உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி, தனித்திறன் கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, வட்டார கல்வி அலுவலர் ஜெயவதிரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பிரின்ஸ், பரமன்குறிச்சி மகாவிஷ்ணு, எள்ளுவிளை மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்