கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 19:45 GMT

சுதந்திர தின விழா

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம்

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம், கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய மேலாளர் ராஜராஜன் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.கரூர் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அரவக்குறிச்சி-நொய்யல்

அரவக்குறிச்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் சந்தோஷம் தேசியகொடியை ஏற்றி வைத்தார்.நொய்யல் அருகே உள்ள புகழூர் நகராட்சி அலுவலகத்திலும், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்திலும் தலைவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தனர். புகழூர் தாலுகா அலுவலகம், புகழூர் தீயணைப்பு நிலையம், வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

குளித்தலை-தோகைமலை

குளித்தலை கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குளித்தலை எம்.எல்.ஏ. தேசிய ெகாடியை ஏற்றி வைத்தார். இதேபோல் குளித்தலை நகராட்சி அலுவலகத்திலும், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மருதூர் பேரூராட்சி அலுவலகத்திலும் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்றத்தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

வெள்ளியணை

ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெள்ளியணை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்