அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

வேதாரண்யம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

Update: 2022-08-14 18:35 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்பு பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நிஷாந்தி, துணைத் தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்