ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா

ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா

Update: 2023-08-15 18:45 GMT

நாகூர்:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் சுகுமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அப்போது பல்கலைக்கழக அனைத்து பணியாளர்களும் தங்கள் கடமையை தேசப்பற்றுடன் செய்து நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பெலிக்ஸ் வரவேற்றார். முடிவில் முதல்வர் (பொறுப்பு) மணிமேகலை நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்