சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்படடது.

Update: 2022-08-15 19:06 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்படடது.

சுதந்திர தின விழா

மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவில் தேசியக்கொடியை நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் ஏற்றி வைத்தார். இதில் நகர சபை துணைத்தலைவர் கைலாசம், ஆணையர் செண்ணுகிருஷ்ணன், பொறியாளர் குணசேகரன், மேலாளர் மீரான்மன்சூர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதாஅருள்ராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார்,. பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அரசு ஆஸ்பத்திரி

மன்னார்குடி கூட்டுறவு நகர வங்கியில் தலைவர் ஆர்.ஜி.குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.மன்னார்குடி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைகளுக்கு நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் தலைமையில் மாலை அணிவித்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சஞ்சீவி தெரு அலுவலகத்தில்் உதவி செயற்பொறியாளர்சம்பத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் ஆஸ்பத்திரி நிலைய அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் நகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு நகர சபை துணை தலைவர் சுதர்சன், ஆணையர் கிருஷ்ணவேணி, என்ஜினீயர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூத்தாநல்லூர் அஜாத்யன் குரூப்ஸ் நிறுவனம் சார்பில் நடந்த விழாவில் உரிமையாளர் எழில்மாறன் முன்னிலையில் நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் ஜலீல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியர் கலைச்செல்வி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகசூமியா பேகம், துணை தலைவர் ஜியாவுதீன் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு சங்கம்

ஊட்டியாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் இளங்கோவன் முன்னிலையில் புள்ளமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். வடபாதிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சித்தரஞ்சன், ஓகைப்பேரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சின்னையா முருகையன், சித்தனக்குடி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தலைவர் தமிழ்ச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் தலைவர் பசீர்அகமது, லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் தலைவர் உதயகுமார் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். கூத்தாநல்லூரில் காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் சிகாபுதீன், சட்ட உரிமைகள் நகர செயலாளர் மாரிமுத்து, வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

நன்னிலம்

நன்னிலம் சட்டமன்ற அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார், நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்பழகன், ஆணையர்கள் ரமேஷ், வெற்றியழகன், மற்றும் அலுவலர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற அலுவலகங்கள்

நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜசேகரன், பேரளம் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், மூங்கில் குடி ஊராட்சியில் தலைவர் கார்த்திகேயன், குவளைக்கால் ஊராட்சியில் அலுவலகத்தில் தலைவர் சண்முகவேல், பனங்குடி ஊராட்சியில் தலைவர் சாந்தி குமார், உபயவேதாந்தபுரம் ஊராட்சியில் தலைவர் ரமேஷ், கோவில் திருமாளம் ஊராட்சியில் தலைவர் சோனியா பாலமுத்து, ஆணைகுப்பம் ஊராட்சியில் தலைவர் சக்திவேல் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். நன்னிலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சிமன்ற தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 66 பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிதியாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்புநிதி பத்திரத்தை தாய்மார்களிடம் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆதிஜனகர், நடனசிகாமணி, பொன்னுசாமி, பாரதிமோகன், சத்தியவாணன், நதியாசெந்தில்குமார், மேனகாகார்த்திகேயன், அனிதாமாதவன், ஜெனிதாவேலு, ஜெயசித்ரா அய்யாதுரை, சிவகாமி பாலமுருகன் மற்றும், ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு வரவேற்றார். முடிவில் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் தலைமையாசிரியை உமா ஆகியோர் முன்னிலையில் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றினார்.இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணை தலைவர் பாலச்சந்தர், பேரூராட்சி துணைத் தலைவர் தளபதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்