பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அணையில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 56.53 அடியாக சரிந்துள்ளது.

Update: 2023-01-05 06:01 GMT

கூடலூர்,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகைஅணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 56.53 அடியாக சரிந்துள்ளது.

இருந்தபோதும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பாசனத்திற்கு 5000 கனஅடியும், மதுரை மாநகர குடிநீருக்கு 69 கனஅடியும் என மொத்தம் 5069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.25 அடியாக உள்ளது. 274 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.66 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மழை எங்கும் இல்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்