மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
மேட்டூர்,
மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. 2-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 249 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து திடீரென 3-ந் தேதி காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 599 கனஅடியாக அதிகரித்துள்ளது. 2 ந்தேதி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. 3ந்தேதி காலை அணையின் நீர்மட்டம் 115.38 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.