ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கூடலூரில் பலத்த மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2022-10-17 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து லேசான வெயிலும் தென்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு வெயில் காணப்பட்டது.

இதையடுத்து மாலை 4 மணிக்கு கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, ஸ்ரீமதுரை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றி முற்றி உள்பட பல ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கூடலூர் நகர பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்