கொல்லிமலை அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.

Update: 2022-08-04 17:07 GMT

சேந்தமங்கலம்:

தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொல்லிமலையில் மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகளும் உருவாகி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி போன்ற அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் ஆடிபெருக்கையொட்டி அருவிகளில் குளிக்க தடை இருந்ததால் கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தொடர்ந்து நேற்றும் கொல்லிமலையில் பலத்த மழை கொட்டியது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.

சீதோஷ்ண நிலை

இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அருவிகளில் குளிக்க அனுமதிக்கவில்லை. சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகளில் அவர்கள் குவிந்தனர். இதேபோல் புளியங்காடு தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்நிலைகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்