ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏலகிரி மலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பள்ளி மாணவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2023-04-02 16:10 GMT

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத்தலமான இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், பாண்டா செல்பி பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் பள்ளி குழந்தைகளையும் சுற்றுலா அழைத்து வந்தனர்.

படகு சவாரி

சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அறிய வகை பூக்கள், பழங்கள், மூலிகைப் பண்ணைகளை பார்வையிட்டனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில் ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும். தாவரவியல் பூங்கா, சாகச விளையாட்டு தளத்தினையும் விரைவில் தொடங்க வேண்டும். அத்தனாவூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை பராமரித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்