பச்சை திராட்சை விலை உயர்வு

சின்னமனூர் பகுதியில் பச்சை திராட்சை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-26 22:00 GMT

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விதை இல்லா பச்சை திராட்சை பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் விவசாயிகள் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் பழங்கள் விளைச்சல் அடைவதால் நன்கு திறட்சி, சுவையாகவும் இருக்கும். இதனால் இந்த பகுதி பச்சை திராட்சை பழத்திற்கு தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கடும் கிராக்கி உள்ளது. ஆண்டிற்கு 2 முறை மட்டுமே பச்சை திராட்சை அறுவடை செய்யப்படும். இந்நிலையில் தற்போது 2-ம் போக சாகுடியில் திராட்சை பழங்கள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவற்றை விற்பனைக்கான அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளாவிற்கு அதிக அளவிலான பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பச்சை திராட்சை பழம் ரூ.80 முதல் ரூ.100 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்