சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு

சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு.

Update: 2022-10-03 18:51 GMT

சென்னை,

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய நடைமுறை திட்டங்களை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு ரெயில்கள் 130 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் ரெயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கப்பட்ட ரெயில்கள் கீழ்வருமாறு:-

* சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் பயண நேரம் 90 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

* சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயண நேரம் 70 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

* திருப்பதி-சென்னை இடையே இயக்கப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் நேரம் குறைக்கப்பட்டது.

* கோவை-சென்னை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது.

* குஜராத் மாநிலம் அமதாபாத்-சென்னை இடையே இயக்கப்படும் 'ஹம்சபர்' எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது.

* குஜராத் மாநிலம் ஏக்தாநகர்-சென்னை எக்ஸ்பிரஸ் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

* சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

* கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த தடங்களில் பயணிக்கும் ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்