பூக்கள், பழங்கள் விற்பனை அதிகரிப்பு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்தது. மல்லிகை கிலோ ரூ.1,200, ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது.

Update: 2023-04-13 18:45 GMT

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்தது. மல்லிகை கிலோ ரூ.1,200, ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டு

நாடு முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதை மலையாள மக்கள் விசு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

எனவே இன்று காலையில் எழுந்து பல்வேறு வகையான பழங்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசுவை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டுகளில் பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. மக்கள்கூட்டம் காரணமாக பூ மார்க்கெட் பகுதியில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து கோவை பூ மார்க்கெட் சங்க நிர்வாகி கூறியதாவது:-

பூக்கள் விற்பனை

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நேற்று பூ மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே பூக்கள் விற்பனைக்கு வந்தது.

பூக்களின் விலை நிலவரம் சித்திரை ெகான்றை பூ ஒரு கட்டு ரூ.20, மல்லி ரூ.1,200, செவ்வந்தி ரூ.360, ரோஜா ரூ.160 முதல் ரூ.200, அரளி ரூ.480, கோழிக்கொண்டை ரூ.120 முதல் ரூ.140, சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.100, மரிக்கொழுந்து ரூ.40, செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.60, மருகு ஒரு கட்டு ரூ.15, கனகாம் பரம் ரூ.800, முல்லை ரூ.800 முதல் ரூ.1000, ஜாதி ரூ.800, தாமரை ரூ.15 முதல் ரூ.20 வரைக்கு விற்பனையானது.

பூக்கள் வாங்க மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. பண்டிகை என்பதால் விலை கூடுதலாக இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை விரும்பி வாங்கி சென்றனர். இதனால் விற்பனை அதிகமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பழங்கள் விலை

இதை போல் பழங்களின் விலையும் அதிகமாக இருந்தது. இது குறித்து உக்கடம் பழ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சித்திரை விசுவை முன்னிட்டு ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200, மாதுளை ரூ.180, கொய்யா ரூ.80, ஆரஞ்சு ரூ.100, சாத்துக்குடி ரூ.70, மாம்பழம் ரூ.120 மாம்பழம் மல்கோவா ரூ.180, திராட்சை பச்சை ரூ.80, கருப்பு ரூ.120, வெள்ளரிப்பழம் ரூ.60 முதல் ரூ.80, எலுமிச்சை பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்