பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-08 12:44 GMT


சென்னை,

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஜுலை 10 ஆம் தேதி முதல் அணைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுளள்து.

அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ. 25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது.

தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்