மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: கிணத்துக்கடவு தாலுகாவில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்-சுகாதாரத்துறையினர் அறிவுரை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2022-06-23 12:54 GMT

கிணத்துக்கடவு

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. வாரம் தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலர் முதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். தற்போது மீண்டும் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது மீண்டும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படியும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

முகக்கவசம் அணிய வேண்டும்

மேலும், சளி, காய்ச்சல் இருமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் அருகில் உள்ள பல தாலுகாக்களில் கொரோனா தொற்று உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவதோடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முக கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்