பி.ஏ5 வகை கொரோனா தொற்று அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் பி.ஏ5 வகை கொரோனா தொற்று 25 சதவீதம் வரை பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பி.ஏ5 வகை கொரோனா தொற்று 25 சதவீதம் வரை பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் வகை பாதிப்புகள் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும் 8 வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது.
இதில் பி.ஏ5 என்ற ஒமைக்ரான் வகை பாதிப்பு 25 சதவீதம் வரை பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி முக கவசம் அணிந்து கொண்டாலே கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.