வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

பட்டுக்கோட்டையில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-06-10 20:00 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையில் வருமான வரித்துறை சார்பில் அட்வான்ஸ் வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நித்யா தலைமை தாங்கி அட்வான்ஸ் வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பேசினார்.துணை ஆணையர் சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள் வில்விஜயன், மஞ்சுளா மற்றும் ஆடிட்டர்கள் ஹரிசங்கர், ராஜகோபால் முன்னிலை வகித்தனர். வருமானவரி அட்வான்ஸ் வரி செலுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிகாரிகள் வியாபாரிகளுடன் கலந்துரையாடினர். வருமான வரி, அட்வான்ஸ் வரி செலுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பேசினர். கூட்டத்தில் வியாபாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்