சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியாளர்கள் ஆகியோர்களுக்கு மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கி பொதுமேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வருமான வரித்துறை துணை ஆணையர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் கே.சி.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பொதுமேலாளர்கள் காளைலிங்கம், விஜயகுமார் உள்பட கூட்டுறவு வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.