தொடர் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு

சீர்காழி பகுதியில் தொடர் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2022-11-06 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, ராதாநல்லூர் ஆகிய கிராமங்களில் தொடர் மழை, கடல் நீரால் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் மற்றும் நேரில் விதைப்பு நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் மழை நீர் மற்றும் உப்பு நீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் எடுத்து எம்.எல்.ஏ.விடம் காண்பித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருமுல்லைவாசல் ஊராட்சி பகுதிகளில் முறையான வடிகால் வசதிகளை செய்து தர வேண்டும், கடல் நீர் உட்புகாத வகையில் உப்பனாற்று கரையை பலப்படுத்தி தர வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், கட்சி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பூவரசன், ஸ்டீபன் ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து எடமணல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்