அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
நாட்டறம்பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரவிவர்மன் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லட்சுமி ரவிவர்மன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவித்தலைமை ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.