சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு ஊக்கத்தொகை

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஊக்கத்தொகை வழங்கினார்.

Update: 2022-12-18 16:52 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாபாட்டி, ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏலகிரி மலையில் உள்ள தாயலூர் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, கொலை, கொள்ளை வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு ஊக்கத் தொகை வழங்கி, பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ்சூப்பிரண்டுகள் திருப்பத்தூர் கணேசன், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள்,‌ சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்