நாராயண சுவாமி கோவிலில் அவதார தின விழா

களக்காடு அருகே நாராயண சுவாமி கோவிலில் அவதார தின விழா நடைபெற்றது.

Update: 2023-03-04 19:58 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகளும், விஷேச பள்ளியறை அலங்காரமும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து அவதார நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் செண்டை மேளம், ராஜமேளம் முழங்க அய்யா நாராயண சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பத்மநேரி, தம்பிதோப்பு, சாலைப்புதூர், சவளைக்காரன்குளம், திரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நாராயணசுவாமி கோவில்களிலும் அவதார தின விழா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்