தண்ணீர் தொட்டி திறப்பு விழா
கழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை அருகே களப்பாளங்குளம் மயானத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி புதிய தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்து துணை தலைவர் மாரிராஜ், தி.மு.க. கிளை செயலாளர் சுந்தரபாண்டியன், களப்பாளங்குளம் வெள்ளத்துரை, முருகன், சம்பாகுளம் மாரியப்பன், காசி, மாரியப்பன் மற்றும் மாரிமுத்து, செல்லப்பா, ராமகிருஷ்ணன், காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.