திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் கனிமொழி எம்.பி. சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி கொடுத்து தொடங்கி வைத்தார்.
விழாவில், நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.