பள்ளி கட்டிடம் திறப்பு விழா
இளையான்குடி அருகே பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கொ.இடையவலசை ஊராட்சி ஒன்றியத்தில் இந்திரா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறக்கப்படாமல் சமுதாய கூட கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்ததாக கடந்த 13-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கச்சாத்தான் நல்லூர் ஊராட்சியில் ரூ.5.36 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தையும், சாத்தனி ஊராட்சியில் சத்துணவு மற்றும் சமையலறை கட்டிடத்தையும், சாலைக்கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இளையான்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஊர்க்காவலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், ஆறு.செல்வராஜன், கச்சாத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கொ. இடையவலசை ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா, சாத்தனி ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுதீன், சாலைக்கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.