தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நடந்தது.
தங்கமயில் ஜூவல்லரி
தமிழகத்தில் அதிக கிளைகளை கொண்ட தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு தூத்துக்குடியில் கிளையை தொடங்கியது. இந்த கிளை தற்போது, அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. வ.உ.சி. கல்விக்குழும சேர்மன் சொக்கலிங்கம் திறந்து வைத்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். இதில் நிர்வாக இணை இயக்குனர் பா.ரமேஷ், நிர்வாக பொது மேலாளர்கள் அருண், கிஷோர்லால், முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிச்சய பரிசு
இந்த ஜூவல்லரியில் தங்க மாங்கல்யம் திருமண நகை கலெக்சன் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் தங்கம், வைரம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்களுக்கு பிரத்யேக தனிப்பிரிவு, அதிகபட்ச தரத்துடன் அரசாங்க சான்று பெற்ற தங்க நகைகள் உள்ளது.
திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு 10 கிராம் தங்கத்திற்கு ரூ.2,023 தள்ளுபடியும், வெள்ளி கிலோவிற்கு ரூ.2,023 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வைரம் கேரட்டிற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாகவும், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வருகிற 3-ந் தேதி வரை உள்ளது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.