புதிய கலையரங்கம் திறப்பு விழா

வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து ராமநேரி கீழூரில் புதிய கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-09-21 18:47 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து ராமநேரி கீழூரில் ரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த கபடி போட்டியிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றிய கவுன்சிலர் செல்வ பிரேமா, தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஜேசுமணி, மகளிர் அணி செயலாளர் கல்யாணி, நிர்வாகிகள் செட்டிகுளம் செல்வராஜ், கீரன்குளம் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்