நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள புற நோயாளிகள் நுழைவு சீட்டு கொடுக்கும் பிரிவு மற்றும் மக்களை தேடி மருத்துவம் பிரிவு கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி அந்த புதிய பிரிவுகளை திறந்து வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 2 பேரின் குடும்பத்தாருக்கும், உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சீதாலட்சுமிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் டீன் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் எழில் ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.