புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா
கடையம் அருகே புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து புங்கம்பட்டியில் புதிய குடிநீர் தொட்டி மற்றும் ஊரின் மையப்பகுதியில் சி.சி.டிவி கேமரா ஆகியவை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் பிரேமா ராதா ஜெயம் தலைமை தாங்கினார். யூனியன் கவுன்சிலர் ஆவுடைய கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.