புதிய ரேஷன்கடை திறப்பு விழா
திசையன்விளை அருகே புதிய ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் நகரில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன் வரவேற்று பேசினார்.
விழாவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் மற்றும் அப்புவிளை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.