காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பதவியேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாக எஸ்.வெங்கடேஷ் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவியேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் பாடுபடுவேன், இந்த மாவட்ட மக்கள் என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.
வருவாய்த்துறை அதிகாரியாக பொறுப்பேற்று கொண்ட வெங்கடேசை கலெக்டர் அலுவலக மேலாளர் டி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் வரவேற்றனர்.