புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டுக்கல்லில் தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2023-03-14 19:00 GMT

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மஹாலில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் சபாஷ் உசேன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாவட்ட தலைவர் அன்புசெல்வம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார். இதில் திண்டுக்கல் மாவட்ட தலைவராக சிவபாரதி வாட்டர் சப்ளை உரிமையாளர் சிவசண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பி. வாட்டர் சப்ளை உரிமையாளர் தர்மர், பொருளாளராக ஓம்முருகா வாட்டர் சப்ளை உரிமையாளர் வினோத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு, உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்