நீர்மோர் பந்தல் திறப்பு விழா

தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-20 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஆ.வெங்கடேசன் ஏற்பாட்டில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கே.சி.ரோட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பனர்கள் எஸ்.எம்.ரஹீம், சாமித்துரை, தமிழ்செல்வி, நகர்மன்ற உறுப்பினர் பேபி ரெசவுப்பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்